News March 31, 2025
அது வேண்டாமே… பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்!

கேரளா, குஜராத், அந்தமான் நிகோபார் தீவுகளின் கடற்கரையில் கடல்சார் சுரங்கம் அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்யுமாறு PM மோடிக்கு ராகுல் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் முடிவை கடுமையாக கண்டித்து இந்த கடிதத்தை எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 3, 2025
வாழை நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இந்த நடிகைகளுக்கு எப்படி தான் மனசு வருதோ? எதுவுமே நடக்காத மாதிரி எப்படி தான் இருக்காங்களோ என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருவது மலையாள நடிகை நிகிலாவைத் தான். வாழை திரைப்படம் மூலம் நல்ல பெயர் எடுத்த இந்த நடிகை பாலியல் புகாருக்குள்ளான மலையாள நடிகர் திலீப்புடன் கத்தாரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது போதாதென்று அவருடன் ஒரே மேடையில் நடனமாடியது தான் நெட்டிசன்களை கொதிப்படைய வைத்துள்ளது.
News April 3, 2025
என்ன பண்ண போறீங்க.. மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

USAவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்திய நிலத்தை திரும்ப தரும்படி மோடியும், குடியரசுத் தலைவரும் சீனாவுக்கு கடிதம் எழுதியது குறித்து சீன தூதர் தெரிவித்ததை வைத்தே விஷயம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக விமர்சித்தார். இந்திய நிலத்தை திரும்ப பெற அரசு என்ன செய்ய போகிறது எனவும் வினவினார்.
News April 3, 2025
பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான அடையாளங்கள் இடம்பெறக் கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதிய அடையாளங்களுடன் பள்ளியில் நிகழ்ச்சி நடந்ததை சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.