News November 24, 2024
என்று ஓயும் இந்த சூது மயக்கம்?

சூதில் தர்மனே அனைத்தையும் இழந்தான் என்று புராணம் இருக்கையில், நாம் எல்லாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு நாளும் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை என்ற செய்தியை கேட்கும்போதெல்லாம் இதனை தடுக்க அரசு ஏதாவது செய்யாதா என்று தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனாலும், அரசாங்கம் ஏதோ கிணற்றில் போட்ட கல் போல இந்த விவகாரத்தை வேடிக்கை பார்க்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ!
Similar News
News November 26, 2025
6,000 பேரை பணிநீக்கம் செய்யும் HP

AI-ன் வரவால் பல டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2028-க்குள் 4,000 முதல் 6,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக HP தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே AI எவ்வாறு பணியாற்றும் என்பதை ஆய்வு செய்து வந்ததாகவும், இந்த பணிநீக்கத்தின் மூலம் நிறுவனம் ₹8,926 கோடியை சேமிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், இது நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளது.
News November 26, 2025
விஜய் இதயம் நொறுங்கி போயிருந்தார்: ஷ்யாம்

விஜய்க்கு தினமும் மெசேஜ் செய்து, வாரத்திற்கு ஒரு முறையாவது பேசிவிடுவேன் என ஷ்யாம் தெரிவித்துள்ளார். ஆனால், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய்யை 5 நாள்களுக்கு மேலாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும், அந்தளவிற்கு அவர் இதயம் நொறுங்கி போயிருந்ததாகவும் ஷ்யாம் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையில் மிகவும் வலி நிறைந்த கட்டத்தை விஜய் கடந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
News November 26, 2025
IPL கம்மியா ஆடுங்க.. கிப்ஸ் அட்வைஸ்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணிக்கு ஹெர்ஷல் கிப்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். இனி அடுத்தக்கட்டமாக இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, IPL போட்டிகளை குறைத்துக் கொண்டு அதிக டெஸ்ட்களில் விளையாடுங்கள் என கிப்ஸ் கூறியுள்ளார். ஏற்கெனவே IPL செயல்பாடுகளை வைத்து இந்திய அணிக்கு வீரர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?


