News November 16, 2024

நயன்தாரா சொன்ன அந்த ஒரு வார்த்தை

image

தனுஷ் குறித்த அறிக்கையில் அவரை சரமாரியாக வசைபாடியிருக்கும் நயன்தாரா, இறுதியில் ஜெர்மன் வார்த்தை ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். ‘Schadenfreude’ என்ற வார்த்தையை தனுஷ் புரிந்துகொண்டு இனி அதனை யாருக்கும் செய்ய வேண்டாம் என்று அறிக்கையில் நயன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அர்த்தம் “அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காண்பவர்” என்பதாகும்.

Similar News

News March 5, 2026

போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டது: ராகுல்

image

இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல் வீழ்த்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டதாக கூறிய அவர், PM மோடி இதைபற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என விமர்சித்துள்ளார். மேலும், இதுபோன்ற ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை எனவும், ஆனால் USA-விடம் நாட்டையே விட்டுக்கொடுத்த ஒரு பிரதமரை இந்தியா தற்போது கொண்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.

News March 5, 2026

விஜய் கூட்டணியில் பெரிய கட்சி.. சற்றுநேரத்தில் அறிவிப்பு

image

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணியும், திமுக கூட்டணியில் இணைய திருமாவும் முட்டுக்கட்டை போட்டதால், ராமதாஸ் இதுவரை கூட்டணியை அறிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், தைலாபுரம் இல்லத்தில் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி செல்ல ராமதாஸ் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 5, 2026

அது வெறும் குரங்கல்ல.. 13-ம் நாள் காரியம் செய்த மக்கள்!

image

குரங்கிற்கு காரியமா என தோன்றலாம். ஆனால், ம.பி.,யின் டலபட்புரா மக்கள், அது தங்கள் வீட்டின் அங்கம் என உருகுகின்றனர். பல ஆண்டுகள் தங்களுடன் வாழ்ந்து வந்த குரங்கு விபத்தில் இறந்துவிட கிராமமே சோகத்தில் மூழ்கியது. கண்ணீர் மல்க இறுதி மரியாதை செய்தவர்கள், 13-ம் நாள் காரியமும் செய்துள்ளனர். குரங்கின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குரங்குடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.

error: Content is protected !!