News January 22, 2025
அந்த மனசு தான் சார் கடவுள்!

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், உடனடியாக ஓடிவந்து உதவிய ஆட்டோ டிரைவருக்கு ₹11,000 வெகுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் வண்டியில் ஏறியது நடிகர் என்பது தனக்கு தெரியாது எனவும், உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய அப்போதைய பணியாக இருந்ததாகவும் ஆட்டோ டிரைவர் கூறுகிறார். நல்ல மனம் வாழ்க!
Similar News
News March 13, 2026
எல்லாமே புதுசுதான்.. களைகட்டும் தமிழக அரசியல்

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே புதிய கட்சிகளை தொடங்கும் முக்கிய தலைவர்கள், தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், 2021-க்குப் பிறகு தமிழகத்தில் முக்கிய முகங்கள் தொடங்கிய கட்சிகளை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News March 13, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு மகிழ்ச்சி செய்தி

ரேஷன் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்க்க சூப்பர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. TN முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் நாளை(மார்ச் 14) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதில், பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். உங்கள் பகுதியில் வழங்கும் ரேஷன் பொருள்கள் தரமற்று இருந்தாலும் புகாரளிக்கலாம். SHARE IT
News March 13, 2026
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்… SC கருத்து

பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால், அது பெண்கள் நலனை பாதிக்கும் என்று SC கவலை தெரிவித்துள்ளது. அப்படி செய்வதால் பெண்களுக்கு யாரும் வேலை தர மாட்டார்கள் என்றும், இது சரியான தீர்வாகாது எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் நிறுவனங்கள் தானாக முன்வந்து விடுப்பு வழங்கினால் அது நல்லது என்று மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்க கோரப்பட்ட பொதுநல மனுவின் விசாரணையில் இந்த கருத்தை SC தெரிவித்துள்ளது.


