News August 16, 2025

அந்த ஹீரோயின்தான் தனுஷின் தங்கையாம்!

image

தனுஷ் தற்போது இட்லிகடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நித்யா நடிக்க, இவர்களுடன் அருண்விஜய், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக ஷாலினி பாண்டே நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Similar News

News March 3, 2026

தொகுதிக்குள் லாரிலாரியாக பரிசை இறக்கும் SP வேலுமணி

image

தனது கோட்டையாக உள்ள கோவையில் மீண்டும் வெற்றி வாகை சூட வேண்டும் என ’வாரி வழங்கும்’ வேலைகளில் அதிமுக இறங்கியுள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் பரிசுகளை அதிமுக இறக்கியது. அதன் தொடர்ச்சியாக தனது தொகுதியில் 25,000 ஓட்டுகள் உள்ள SC, ST மக்களுக்கு லாரிகளில் கொண்டுவந்த 200 லி டிரம்களை விநியோகித்து வருகிறாராம் SP வேலுமணி. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

News March 3, 2026

BREAKING: தங்கம் விலை ஒரேநாளில் ₹1,560 குறைந்தது

image

போர் பதற்றம் அதிகரித்த போதிலும், தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,560 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹80 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,480 சரிந்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,465-க்கும், 1 சவரன் ₹1,23,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிலோ 3.15 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

News March 3, 2026

அமித் ஷா கேட்டும் அசையாத EPS

image

ராஜ்பசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார் EPS. இதில் தொகுதி பங்கீட்டை விட ராஜ்யசபா சீட் பற்றி தான் நீண்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. குறிப்பாக கூட்டணியில் உள்ள GK வாசனுக்கு மறுபடியும் ராஜ்யசபா சீட் கொடுக்கும்படி அமித்ஷா கேட்டாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த EPS, அன்புமணி மற்றும் அதிமுகவே 2 சீட் என உறுதியாக கூறிவிட்டாராம்.

error: Content is protected !!