News October 4, 2024
அந்த ஹீரோ என் ரூமுக்குள் வர முயன்றார்: மல்லிகா ஷெராவத்

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் சமீபத்திய நேர்காணலில் தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். ஒரு மல்டிஸ்டார் படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றபோது, நாயகன் இரவில் தனது ரூம் கதவை தட்டியதாக கூறியுள்ளார். கதவை திறக்க மறுத்ததையடுத்து அவர் கதவை உடைத்ததாகவும், அதன்பின் அவருடன் சேர்ந்து நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தான் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 28, 2025
வியாழக்கிழமையில் குரு பகவானின் முழு அருள் பெற..

மந்திரம்:
குணமிகு வியாழ குரு பகவானே!
மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ குருபர நேசா!
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!
குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில், இந்த மந்திரத்தை சொன்னால், வாழ்க்கையில் இன்பம் பெருகி என்றும் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
News August 28, 2025
அதிமுக கூட்டணியில் துணை முதல்வர்.. புது வியூகம்!

நெல்லையில் பேசிய அமித்ஷா TN-ல் கூட்டணி அரசு அமையும் என்றார். அதுவே அண்ணாமலை, EPS-யை முதல்வராக்க உழைக்க வேண்டுமென்றார். இக்கருத்துகளின் பின்னணியில் முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள நெருடல்களை பாஜக சரி செய்யும், ஆனால் கூட்டணி அரசு தான் அமைய வேண்டும் என பாஜக திட்டவட்டமாக EPS தரப்பிடம் சொல்லியதாக தகவல்கள் உள்ளன. துணை முதல்வர் பதவியும் பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.
News August 28, 2025
லோன் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.