News May 8, 2024

அந்த மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை

image

மரணமடைவதற்கு முன் காங்., தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்த ராஜா என்பவரைக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னிடம் ரூ.200 கோடி சொத்து உள்ளது. ரூ.30 லட்சத்திற்காக அவரைக் கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை என விளக்கமளித்த ஆனந்த ராஜா , கடிதத்தில் தனது பெயர் இருந்ததால், மும்பைக்கு சென்றதாகக் கூறினார்

Similar News

News August 19, 2025

அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

image

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

அமித்ஷா மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மையா?

image

நெல்லையின் தச்சநல்லூர் பகுதியில் ஆக.22-ம் தேதி அமித்ஷா தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்க முடியாது என நெல்லை மாநகர துணை ஆணையர் கூறியதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், காவல்துறை சார்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான அனுமதி பரிசீலனையில் உள்ளது எனவும், பேனர் வைக்க மட்டுமே அனுமதி மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

டி.ஆர்.பாலுவின் மனைவி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

image

சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினார். என் ஆருயிர் நண்பர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைவால் வேதனையடைந்தேன். ஆர்.பாலு மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!