News March 20, 2025
IPL-ல் அந்த தடை நீங்கியது – பவுலர்களுக்கு குட் நியூஸ்!

பந்தில் எச்சிலை தேய்ப்பது மூலம் பவுலர்கள் எளிதாக ஸ்விங் செய்ய முடியும். கொரோனா காலத்தில், நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இதற்கு ஐசிசி தடை விதித்தது. தற்போதுவரை சர்வதேச போட்டிகளில் இத்தடை தொடரும் நிலையில், IPL-ல் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பந்தில் எச்சில் தேய்ப்பதற்கு இருந்த தடையை ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ நீக்கியுள்ளது. சர்வதேசப் போட்டிகளுக்கும் தடை நீங்குமா? உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 17, 2025
ஒரு முஸ்லிம் நாட்டை தொட்டால் 40 நாடுகள் வரும்!

கத்தாரில் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தலைநகர் தோஹாவில் துருக்கி, பாக்., உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தின. அதில், வெளிப்புற தாக்குதல்களை எதிர்கொள்ள, ஐரோப்பிய நாடுகளின் NATO அமைப்பை போல், முஸ்லிம் நாடுகளும் ராணுவ கூட்டமைப்பை உருவாக்குவது என முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த 2015-லேயே இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
News September 17, 2025
SKY-ஐ பன்றி என விமர்சித்த விவகாரம்: புது விளக்கம்

<<17731873>>சூர்யகுமார் யாதவ்<<>>வை பன்றி என முன்னாள் பாக்., வீரர் முகமது யூசஃப் விமர்சித்தது சர்ச்சையானது. ஆனால், நாட்டிற்காக விளையாடும் உறுதிமிக்க வீரர்களை மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்பது தனது உள்நோக்கம் அல்ல என யூசஃப் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அஃப்ரிடியை நாய் குரைப்பதாக பதான் விமர்சித்த போது இந்திய மக்கள் எங்கே போனார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 461 ▶குறள்: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். ▶பொருள்: எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.