News April 16, 2025
அந்த நடிகர் போதையில் தப்பா நடந்துக்கிட்டாரு- நடிகை வின்சி!

பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ், மலையாள முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறி நடந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் இருந்து விலக நினைத்த போது, டைரக்டரும், தயாரிப்பாளரும் மன்னிப்பு கேட்டதால், வேறு வழியின்றி அப்படத்தில் நடித்ததாக தெரிவித்தார். வின்சி அலோஷியஸ் ஜன கண மன, சவுதி வெள்ளக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த நடிகர் யாராக இருக்கும்?
Similar News
News December 3, 2025
திருவாரூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 3, 2025
இன்று ஒரே நாளில் விலை ₹5,000 உயர்ந்தது

இந்திய சந்தையில் வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று(டிச.3) ஒரே நாளில் கிலோவுக்கு ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹201-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,01,000-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபரில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளி அக்.15 அன்று 1 கிராம் ₹207-ஐ தொட்டது. அதன் பின்னர் சரிந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
News December 3, 2025
40 சீட்டை டிமாண்ட் செய்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் சீட் ஷேரிங் குழு இன்று பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளதாக தெரிகிறது. இக்குழு 2026 தேர்தலில் 40 தொகுதிகளை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 18-ல் வெற்றிப்பெற்றது. ஆனால் இம்முறை அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும் திட்டத்தில் இருப்பதால், காங்., கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


