News September 30, 2025
ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி: விஜய்

கரூர் துயரச் சம்பவத்தின் போது, தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். சற்றுமுன் வெளியிட்ட <<17876190>>வீடியோவில்<<>> பேசிய அவர், எங்களின் வலிகளை, நிலைமைகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டார். இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் விஜய்மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.
Similar News
News April 4, 2026
போர் நிறுத்தத்தை நிராகரித்ததா ஈரான்?

<<19561558>>USA-வின்<<>> போர் விமானத்தை ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 48 மணி நேர போர் நிறுத்தத்தை USA முன்மொழிந்துள்ளது. ஆனால், அதை ஈரான் நிராகரித்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. USA-ன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ராணுவ அமைப்பு புதிய நவீன கட்டமைப்புகளுடன் இலக்கை நெருங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News April 4, 2026
சூரிய பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, மேஷம், துலாம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு, தொழில், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், திருமண யோகம் கூடி வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜயோகம்தான். நீங்க என்ன ராசி?
News April 4, 2026
விஜய் செய்வது சரியான அரசியல் அல்ல: கனிமொழி

எதையெல்லாம் செய்ய முடியாதோ அவற்றை வாக்குறுதியாக அளித்து மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வேலை என <<19546892>>விஜய்<<>> விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கனிமொழி, உண்மை எதுவென்றே தெரியாமல் தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசுவது சரியான அரசியல் கிடையாது என பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில், 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த மகளிர் உரிமைத் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.


