News May 17, 2024
அன்பை பொழிந்த ரசிகர்களுக்கு நன்றி

இந்த ஐபிஎல் சீசன் நாங்கள் நினைத்தது போல் முடியவில்லை என்றாலும், நிறைய பாடங்களும் நீங்காத நினைவுகளும் கிடைத்துள்ளன என்று GT கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். SRH-க்கு எதிரான நேற்றைய கடைசி போட்டி ரத்தானது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், 3 வருடங்கள் இந்த அழகான குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், தங்களை ஆதரித்து அன்பைக் காட்டிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 20, 2025
கூட்டணி சிக்கலில் தவிக்கும் திருமாவளவன்: நயினார்

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எதிராக எதுவும் பேச முடியாமல் திருமாவளவன் சிக்கலில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவன் தனது நண்பராக இருந்தாலும், தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தர விவகாரத்தில் அவரது கருத்து தவறானது என்றார். இதே கருத்தை திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகமும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News August 20, 2025
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக 5 AI படிப்புகள் அறிமுகம்

5 இலவச AI படிப்புகளை மத்திய அரசு ‘ஸ்வயம்’ தளத்தில் வழங்கியுள்ளது. <
News August 20, 2025
ODI ரேங்கிங்கில் காணாமல் போன லெஜண்ட்கள்!

ஐசிசியின் ODI பேட்டிங் தரவரிசை பட்டியலில் இருந்து ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் மாயமாகியுள்ளனர். கடந்த 13-ம் தேதி ரோஹித் 2-ம் இடத்தையும், கோலி 4-வது இடத்தையும் பிடித்திருந்தனர். டி20, டெஸ்ட்டில் ஓய்வு அறிவித்துள்ள இருவரும் கடைசியாக கடந்த பிப்ரவரியில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினர். தற்போதைய புதிய தரவரிசை பட்டியலில் 784 புள்ளிகளுடன் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்துள்ளார்.