News March 17, 2024
தஞ்சாவூர் ஆட்சியர் ஆலோசனை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (17.03.2024) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 29, 2025
ஆட்சியருடன் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் பள்ளி தலமை ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News August 28, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.