News March 27, 2024
வேட்புமனுவை மறந்த தங்க தமிழ்செல்வன்

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை எடுக்காமல் மனு தாக்கல் செய்ய வந்து அதிர்ச்சி அளித்தார். தேனி வேட்பாளரான அவர், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி உள்ளிட்டோருடன் செய்ய ஆட்சியர் அலுவலகம் வந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்ய தேடிய போது, அதை வீட்டில் விட்டு வந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதனால், சிறிது நேர தாமதத்திற்கு பிறகு அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
Similar News
News August 31, 2025
வெண்கலப் பதக்கம் வென்ற சாத்விக் சிராக் ஜோடி

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி, சீனாவின் லியு யீ – சென் போயாங் ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை சீனா வெல்ல, 2-வது செட்டை இந்திய ஜோடி கைப்பற்றியது. வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் 21 – 12 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவி வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
News August 31, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 31)

*1957 – பிரிட்டிஷ் அரசிடம் இருந்து மலேசியா விடுதலை பெற்றது
*1969 – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜவகல் ஸ்ரீநாத் பிறந்த நாள்
*1979 – சினிமா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்
*1997 – வேல்ஸ் இளவரசி டயானா, பாரிசில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
* 2020 – இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நினைவு தினம்
News August 31, 2025
இவரே ODI கேப்டனுக்கு தகுதியானவர்: ரெய்னா

அடுத்த ODI உலககோப்பைக்கு இப்போது இருந்தே வலுவான அணியை உருவாக்க நினைக்கும் BCCI, ரோகித்துக்கு பதில் புதிய கேப்டனை தேட தொடங்கியுள்ளது. தகுதியான நபர் சுப்மன் கில்லா, ஸ்ரேயஷ் ஐய்யரா என BCCI யோசித்து வருகிறது. ஆனால், ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவே ODI-க்கு சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். தோனியின் தோற்றத்தை ஹர்திக்கிடம் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.