News December 6, 2024
ரஜினியின் பிறந்த நாளில் ‘தளபதி’ ரீ-ரிலீஸ்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிச. 12ஆம் தேதி ‘தளபதி’ படம் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான இப்படம் இன்றளவும் ‘க்ளாசிக்’ என்று கொண்டாடப்படுகிறது. இப்படம் வெளியாகி 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதில் இடம்பெற்ற ‘ராக்கம்மா’ பாடல், BBC நடத்திய வாக்கெடுப்பின் படி உலகின் சிறந்த 4வது பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 26, 2025
அருணாச்சல் இந்தியாவின் பகுதியே: வெளியுறவுத் துறை

அருணாச்சல் சீனா உடையது எனக்கூறி, அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் பிடித்துவைத்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது. இதனையடுத்து, சாங்னான் தங்களுக்கு சொந்தமானது. இந்தியாவால் அருணாச்சல் என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது என சீனா கூறியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா EAM அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால், சீனா எவ்வளவு மறுத்தாலும், அருணாச்சல் இந்தியாவின் பகுதிதான் என கூறியுள்ளார்.
News November 26, 2025
சற்றுநேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம்

இன்று ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ள நிலையில், மறுபுறம் தமிழக அரசியலிலும் புதிய புயல் உருவாகியுள்ளது. ஆம்! தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் (11 மணியளவில்) அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று மாலையே விஜய்யை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News November 26, 2025
மும்பை தாக்குதலில் 166 பேர் மரணம்.. தீராத சோகம்

இந்தியாவின் இதயத்தை கிழித்த 26/11 மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று. 2008 நவம்பர் 26-ல், LeT அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்து CST ரயில் நிலையம் உள்பட பல இடங்களை கைப்பற்றினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேரின் உயிர் அநியாயமாக பறிபோனது. 60 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த தாக்குதலில், கடைசியில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார்.


