News December 21, 2024
தளபதி 69: அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே

தளபதி 69 படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் இந்தாண்டுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. நள்ளிரவு 12.20-க்கு கடற்கரை மணலில் விஜய், பூஜா இருவரின் காலணிகளை மட்டும் படமாக எடுத்து, அதனை ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார் பூஜா. 2025 தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 5, 2026
சட்டவிரோத மது விற்பனை செய்த பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்திங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்ற பெண் அப்போகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
யூரியா உற்பத்தி குறைந்தது.. விலை உயருமா?

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக கத்தாரில் LNG உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் யூரியா உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. LNG எரிசக்திக்கு மட்டுமல்லாமல், யூரியா உற்பத்திக்கும் முதன்மை மூலப்பொருளாக உள்ளது. யூரியா பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உர அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
News March 5, 2026
OMG! ரொம்ப நேரம் உட்கார்ந்தா, இப்படி ஒரு ஆபத்தா…

அலுவலகமோ வீடோ, நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் பல்வேறு நோய்கள் வரும் என்கின்றனர் டாக்டர்கள்: *உடல்பருமன் *இதயநோய் & சில வகை புற்றுநோய்கள் *ரத்த சர்க்கரை *தொப்பை & இடுப்பை சுற்றி கொழுப்பு சேர்வது *முதுகு-கழுத்து வலி *தொடை தசைகள் பலவீனமாதல் *ஜீரண பிரச்சனை போன்றவை ஏற்படலாம். இவற்றை தவிர்க்க 30 mins-க்கு ஒருமுறை எழுந்து நடக்கலாம், எளிதான உடற்பயிற்சிகள் (வாரம் 150 mins) அவசியம்.


