News April 5, 2025
மைதானத்தில் ‘தல’ தோனியின் பெற்றோர்

தோனி இன்றோடு ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகும் சூழலில் அவரது பெற்றோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், CSK மற்றும் தோனியின் ரசிகர்கள், அவர் உண்மையில் ஓய்வு பெறுகிறாரோ என்ற கலக்கத்தில் உள்ளனர். முன்னதாக ஒருமுறை, தான் சென்னை மைதானத்தில்தான் ஓய்வை அறிவிப்பேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 6, 2025
ரஷ்யாவின் தாக்குதல்: US மீது ஜெலன்ஸ்கி காட்டம்

ரஷ்யாவின் தாக்குதல் குறித்த அமெரிக்காவின் விமர்சனம் பலவீனமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். ரஷ்யாவின் சமீபத்திய வான்வழி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். இதற்கு, வலிமையான நாடான அமெரிக்காவின் கருத்து பலவீனமாக உள்ளதாக ஜெலன்ஸ்கி சாடியுள்ளார்.
News April 6, 2025
வெற்றிப் பாதைக்கு திரும்புமா SRH?

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் SRH இன்று GTஐ எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் 286 ரன்களை அடித்து பிரமிக்க வைத்த SRH அதன் பின் படுதோல்விகளையே சந்தித்து வருகிறது. மறுபுறம் GT விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஹைதரபாத்தில் நடைபெறும் இன்றைய போட்டி யாருக்கு சாதகமாக அமையப்போகிறது என்பதை பார்க்கலாம். நீங்க யார் பக்கம்?
News April 6, 2025
Apartment-ல் இருப்பவர்களை கதற வைத்த செருப்பு திருடன்

கோயில், கல்யாண மண்டபங்களில் நடக்கும் செருப்பு திருட்டு இப்போ வீட்டு வாசலுக்கே வந்துருச்சு. மும்பையில் உள்ள 13 மாடி அப்பார்ட்மெண்டில் விலை உயர்ந்த செருப்புகளையும், ஷூக்களையும் ஒருநபர் திருடி சென்றுள்ளார். CCTV காட்சியை ஆய்வு செய்த போது ஒருவர் காஷுவலாக வந்து காலணிகளை எடுத்துக்கொண்டு லிப்டில் ஏறிச் செல்வது தெரியவந்தது. 2 பைகளில் காலணிகளை திருடிச் சென்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.