News April 11, 2024

தேர்தல் களத்தை சூடாக்கும் சோதனைகள்

image

தமிழகமெங்கும் தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்படும் பணம் ஒருபக்கம், அதிரடியான வருமான வரித்துறை ரெய்டுகள் மறுபக்கம் என தேர்தல் களம் தீப்பிடிக்கிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடந்து வருகிறது. தேர்தல் நேர பணப்பட்டுவாடாவை தடுக்க மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News January 23, 2026

தேனியில் இன்று மின் தடை அறிவிப்பு..!

image

தேனி மாவட்டம், மதுராபுரி, உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.23) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 23, 2026

தங்கம் விலை தலைகீழாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிக அளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $118.55 உயர்ந்து $4,953.03-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $4.04 உயர்ந்து $96.84 ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் நேற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை இன்று (ஜன.23) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 23, 2026

கோயிலில் இருந்து வரும்போது இவற்றை பிறருக்கு தராதீங்க

image

கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும்போது, இந்த பொருள்களை பிறருக்கு கொடுத்தால், வீட்டிற்கு வரும் தெய்வம் வெளியேறிவிடும் என்பது ஐதிகம். பிரசாதமாக கொடுக்கும் பொருள்கள், அதாவது எலுமிச்சை பழம், பூ, மாலை போன்றவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது. மேலும், கோயிலுக்கு சென்று திரும்பும் போது, யாருக்கும் எந்த தானமும் வழங்கக்கூடாதாம். அதே நேரத்தில், மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவற்றை பிறருக்கு வழங்கலாம்.

error: Content is protected !!