News April 1, 2024
ஹர்திக்கின் கேப்டன்சிக்கான பலப்பரீட்சை

IPL இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் கணக்கைத் தொடங்காத ஒரே அணியாக உள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியா இன்று அணியை எப்படி வழிநடத்தப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், சொந்த மைதானமான வான்கடேயில் எழும் கடும் எதிர்ப்புகளையும் அவர் சமாளிக்க வேண்டும்.
Similar News
News October 30, 2025
குழந்தைகளிடம் குடும்பத்தின் பணக்கஷ்டம் பற்றி பேசாதீங்க!

உங்கள் குழந்தைகளை குடும்பத்தின் நிதி கஷ்டத்தை சொல்லி வளர்க்குறீங்களா? அப்படி செய்வது அவர்களை மனரீதியாக பாதிக்கும் என நிபுணர்கள் சொல்றாங்க. அதற்கு பதிலாக ➤பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கலாம் ➤அதனை சேமிக்க ஊக்கப்படுத்தலாம் ➤பிடித்த பொருள்களை பணத்தை சேமித்து வைத்து வாங்க சொல்லலாம். இதனால், வளர்ந்ததும் அவர்கள் பணத்தை பொறுப்புடன் கையாள்வார்கள். பெற்றோர்களுக்கு SHARE THIS.
News October 30, 2025
பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஃபிலாய்ட் ரோஜர் மையர்ஸ் ஜூனியர்(42) காலமானார். வில் ஸ்மித் நடிப்பில் 1990-ல் வெளிவந்த ‘The Fresh Prince of Bel-Air’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனங்களை வென்ற இவர், மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மை காலமாக நடிகர்கள் பலரும் மாரடைப்பால் மறைந்து வருகின்றனர்.
News October 30, 2025
நெல் கொள்முதலில் பொய் பேசும் CM ஸ்டாலின்: EPS

திமுக ஆட்சியில் தான் ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் என கூறுவது பச்சை பொய் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் உள்ளதாக சாடிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 1.15 கோடி டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், களைகள் நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.


