News December 19, 2024
டெஸ்ட் கிரிக்கெட் கிங் ’பூம் பூம் பும்ரா’

AUS அணிக்கு எதிராக நடைபெற்று வரும் BGT போட்டிகளில் இந்திய பவுலர் பும்ரா பல சாதனைகளைத் தகர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் 85(36 inns) பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் சிராஜ் 74(38inns), ரபாடா 73(28inns), ஷாஹீன் அஃப்ரிடி 67(29inns), ஜேம்ஸ் அண்டர்சன் 57(28inns) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News March 11, 2026
தி.மலை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

தி.மலை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News March 11, 2026
மதுவை திணிக்கும் திமுக அரசு: அன்புமணி

தமிழகத்தில் மது கலாசாரத்தால் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திமுக அரசு மதுவை விற்கவில்லை மாறாக திணிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
News March 11, 2026
சருமத்தை Detox செய்வது எப்படி?

பளபளப்பான சருமத்தைப் பெற கெமிக்கல் நிறைந்த காஸ்மெடிக் பொருள்களை விடுத்து பின்வரும் இயற்கையான டீடாக்ஸ் முறைகளை பின்பற்றலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤தினமும் 2.5 லி நீர் அருந்துங்கள் ➤சர்க்கரை, பால் உணவுகளை குறைத்துக்கொள்ளுங்கள் ➤ஆவாரம் டீ, மஞ்சள் டீ போன்றவை பருகுங்கள் ➤புரோபயாடிக் & நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.


