News February 18, 2025
இந்தியாவில் கால் பதித்த டெஸ்லா

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியர்களை பணியமர்த்தத் தொடங்கியுள்ளது. 13 பிரிவுகளில் மும்பை மற்றும் டெல்லியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மோடி- மஸ்க் சந்திப்பிற்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிக சுங்கவரி விதிப்பால் இந்த EV நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க தாமதமானது. தற்போது வரிவிதிப்பு 110%லிருந்து 70% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
பிறந்த ஊரிலேயே புதைக்கப்படும் கமேனி?

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள இமாம் ரேசா புனித தளத்தில் கமேனியின் உடல் புதைக்கப்படவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. அதேஇடத்தில் தான் கமேனியின் தந்தை கல்லறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கமேனியின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை ஈரான் அரசு செய்து வருகிறது.
News March 4, 2026
தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரிப்பு: ரவிக்குமார் MP

சாதி ரீதியான மோதல்களை தடுப்பதில் காவல்துறை மெத்தனமாக இருக்கக் கூடாது என ரவிக்குமார் MP தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பாஜக போன்ற மதவாத சக்திகள் வலுப்பெற்றதே காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும், சாதிய வன்கொடுமைகளை தடுக்க நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை முழுமையாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
News March 4, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 627 ▶குறள்:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
▶பொருள்: துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.


