News April 15, 2024
ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த டெஸ்லா

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது ஊழியர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. டிசம்பர் கணக்கீட்டின்படி, இந்நிறுவனத்தில் மொத்தம் 1,40,473 பேர் பணியாற்றுகின்றனர். தற்போதைய தகவலின்படி சுமார் 15,000 பேர் வேலையை இழக்க உள்ளனர். உலக சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருந்தாலும், விற்பனையில் போட்டியும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 22, 2025
ஆசிரியர்களை அரசு கைவிடாது: CM ஸ்டாலின்

டெட் தேர்வு குறித்து CM ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற SC-யின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின் அச்சம் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார். அதற்கு, ஆசிரியர் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என்றும் CM உறுதியளித்தார்.
News November 22, 2025
ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை!

ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர்173’ படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், நடிகர்கள் தேர்வு குறித்து ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களுக்காக எந்த காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. யாரேனும் தங்கள் பெயரில் மோசடிகளில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
News November 22, 2025
தமிழகத்தை கண்காணிக்க 15 குழுக்கள்!

தமிழக பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இந்நிலையில், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் IT தற்போதில் இருந்தே கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி IT ஆணையரகம் சார்பில் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் பணப்புழக்கத்தை கண்காணிக்கும் என்று IT தெரிவித்துள்ளது.


