News March 16, 2025
இந்தியாவுக்கு அச்சுறுத்தலான பயங்கரவாதி சுட்டுக்கொலை

லஷ்கர்-ஏ-தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி அபு கத்தால் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அபு கத்தால். இவனுக்கு 2017 ரியாசி குண்டுவெடிப்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலிலும் தொடர்புள்ளது. இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த கத்தாலை NIA நீண்ட காலமாக கண்காணித்து வந்தனர்.
Similar News
News March 16, 2025
ஐடி கார்டு இல்லாமல் ஆட்டோ ஓட்ட முடியாது

ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், அடையாள அட்டை வழங்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, PHOTO உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
News March 16, 2025
வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்

பங்குனி மாதம் தொடங்கியவுடனே வெயில் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டுகிறது. இந்நிலையில், ஒடிஷா மாநிலத்திற்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தெலங்கானா, ஜார்கண்ட், மே.வங்கம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
News March 16, 2025
ஹபிஸ் சயீத் சுட்டுக் கொலை?

2008 மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக். பயங்கரவாதி ஹபிஸ் சயீத் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாகாணம் ஜீலத்தில் காரில் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேரால் அவர் சுடப்பட்டதாகவும், இதில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை. அதேபோல, ஹபீஸ் சயீத் மகனும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும் மறுத்துள்ளது.