News April 23, 2025
பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசை வலியுறுத்திய TTV

ஜம்மு – காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 2, 2026
CINEMA 360°: கௌதம் கார்த்திக் போஸ்டரை வெளியிட்ட ரஜினி

*நடிகர் ரியோவின் ‘ராம் இன் லீலா’ Making வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. *மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. *‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. *கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ROOT – Running Out of Time’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார் .
News January 2, 2026
தமிழகத்தில் பிராய்லர் கோழி உற்பத்தி நிறுத்தம்

தமிழகம் முழுவதும் கறிக்கோழி உற்பத்தி இன்று முதல் நிறுத்தப்படுவதாக கறிக்கோழி பண்ணை வளர்ப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் அறிவித்துள்ளார். வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை கறிக்கோழிகளை வளர்க்க மாட்டோம்; கோழிக்குஞ்சுகளை வாங்க மாட்டோம் என கூறியுள்ளார். இதனால், கோழி உற்பத்தி தடைபடுவதுடன், தட்டுப்பாடு காரணமாக கோழிகளின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
News January 2, 2026
ராசி பலன்கள் (02.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


