News April 23, 2025
பயங்கரவாத தாக்குதல்: உதவி எண்களை அறிவித்த TN அரசு

காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ TN அரசு அவசர எண்களை அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல், வாட்ஸ்அப்) எண்களில் தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் காஷ்மீர் சென்று ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள CM உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
கூட்டணி அமைச்சரவை உருவாகும்: பிரேமலதா

2026-ல் தமிழக அரசியலில் மாய மந்திரம் நடக்கும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் அனைவருக்கும் பங்கும், கூட்டணி அமைச்சரவையும் இந்த தேர்தலில் உருவாகும் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் மக்களும், தொண்டர்களும் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் எனவும், அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை சாத்தியமா?
News November 21, 2025
வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா?

காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இது நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். டீ தூளில் உள்ள கஃபைன், டானின் ஆகியவை வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும். மேலும், அமிலத்தன்மையை அதிகரித்து குமட்டலை உண்டாக்கும் என்றும், பற்களில் கறைகள் உண்டாகி அது நிரந்தரமாகிவிட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
News November 21, 2025
நெல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துக: அன்புமணி

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததாக வெளியான செய்திகள் வருத்தமளிப்பதாக X-ல் அவர் பதிவிட்டுள்ளார். ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டிய நிலை உண்டாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


