News February 12, 2025
பிரதமர் விமானம் மீது தீவிரவாத தாக்குதல் மிரட்டல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739342941499_1173-normal-WIFI.webp)
பிரதமர் மோடியின் USA பயணத்திற்கு முன்னதாக, அவரது விமானம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மும்பை போலீசாருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், மிரட்டல் அழைப்பு விடுத்தவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பிரான்ஸில் இருக்கும் பிரதமர் நாளை USA செல்கிறார்.
Similar News
News February 12, 2025
பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி சர்ச்சை கருத்து
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739350126665_1173-normal-WIFI.webp)
பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி பாலின பாகுபாடான கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. வீட்டில் பேத்திகளோடு இருக்கும் போது, பெண்கள் விடுதிக்குள் இருப்பது போன்று தோன்றுவதாகவும், அதனாலேயே ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து, தங்களது மரபைத் தொடர வழி செய் என்று ராம் சரணிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ராம் மீண்டும் மகளை பெற்றெடுப்பாரோ என பயமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News February 12, 2025
தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் அறிவித்தது இதுதான்..
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739345455030_55-normal-WIFI.webp)
அதிமுக வழக்கில் தீர்ப்பு வெளியான உடன், முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓபிஎஸ் கூறியதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அவர் என்ன அறிவிக்கப் போகிறார்? செங்கோட்டையன் தலைமையில் புதிய அணியா? என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அப்படி எதையும் அவர் அறிவிக்கவில்லை. மாறாக, அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட ஜெ.,வை தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News February 12, 2025
ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_112024/1732040389061_1031-normal-WIFI.webp)
பிப்.17ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.