News April 29, 2025
தீவிரவாத தாக்குதல்.. அஜித் கேட்பது இதைத்தான்!

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என வேண்டிக் கொள்வதாகவும், சாதி, மதம் என இந்தியர்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சாதி, மதங்களையும் மதித்து ஒற்றுமையான, அமைதியான சமூகமாக நாம் வாழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News April 29, 2025
வெற்றிமாறனுக்கு கண்டிஷன் போட்ட சூர்யா!

அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்னும் சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் தொடங்கவில்லை. இந்த ஆண்டில் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், வெற்றிமாறனுக்கு சூர்யா ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். இவரு பாட்டுக்கு வருஷ கணக்குல ஷூட்டிங் எடுத்துட்டு இருக்க போறாரு என்ற பயத்தில், வெற்றிமாறனிடம் முழு ஸ்கிரிப்ட் கேக்கிறாராம் சூர்யா. அவருக்கும் விடுதலை சம்பவம் தெரிஞ்சிருக்கும்ல!
News April 29, 2025
558 காலி பணியிடங்கள்… ₹78,800 வரை சம்பளம்

Employees State Insurance Corporation(ESIC)-ல் ஸ்பெஷலிஸ்ட் கிரேட் II பதவிக்கான 558 காலி பணியிடங்கள் உள்ளன. சம்மந்தப்பட்ட மருத்துவ படிப்பில் முதுகலை டிகிரி பெற்று, 5 வருட அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும். மாதம் ₹67,000 – ₹78,800 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News April 29, 2025
7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. வேலூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?