News April 23, 2025
பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
Similar News
News January 21, 2026
BREAKING: திமுகவில் இணைகிறார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த அதிர்ச்சியில் இருந்தே ஓபிஎஸ் இன்னமும் வெளியே வரவில்லை. இந்நிலையில், அவரது வலதுகரமாக விளங்கிய வைத்திலிங்கமும் திமுகவிற்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைவார் என கூறப்படுகிறது. 2021-ல் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 587 ▶குறள்: மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. ▶பொருள்: மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.
News January 21, 2026
விஜய்யை விளாசிய கருணாஸ்

திமுகவை தீய சக்தி என விமர்சிக்கும் விஜய் என்ன சக்தி என கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் முதலில் தமிழனாக இருக்க வேண்டும் என்றும், தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் வாக்கு உங்களுக்கு வேண்டும், ஆனால் அவர்களின் வாழ்க்கை உங்களுக்கு வேண்டாமா எனவும் கருணாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.


