News March 18, 2024
திருச்சி அருகே பயங்கர விபத்து; இருவர் சம்பவ இடத்தில் மரணம்

துவரங்குறிச்சி அடுத்த முக்கன் பாலம் அருகே இன்று மாலை திருச்சி நோக்கி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News August 27, 2025
திருச்சி: வேலை தேடுவோர் கவனத்திற்கு!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருவருக்குமான வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.,31ஆம் தேதி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 0431-2412726 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 27, 2025
திருச்சி: 1,317 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டதன் மூலம் மொத்தம் 1,317 பள்ளிகளில் 80,129 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
திருச்சி: வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது ஆக.27 மற்றும் செப்.1, 6 ஆகிய தேதிகளில் திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.