News May 16, 2024
தைவான் எல்லையில் சீனாவால் பதற்றம்

தைவான், சீனா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சீன ராணுவத்தின் அடாவடி நடவடிக்கைகளை தினசரி அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 6 மணியளவில் 27 சீன போர் விமானங்களும், 7 ராணுவ கப்பல்களும் எல்லையை கடந்து வந்ததாக தெரிவித்துள்ளது. இதனால், இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
Similar News
News January 7, 2026
யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்: EPS

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என EPS கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அதிமுகவுக்கு சிலர் அவப்பெயரை ஏற்படுத்த முயல்வதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். உழைப்பவர்களுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் உரியநேரத்தில் தரப்படும் என்றும், நேர்காணலின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறியுள்ளார்.
News January 7, 2026
PM மோடி குறித்த கருத்து.. மாணவர்கள் மீது நடவடிக்கை

டெல்லி JNU பல்கலை., மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போது PM மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு FIR பதிவு செய்யப்படும் என பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள் கண்டுபிடிப்புகளுக்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்புகளை உருவாக்கும் ஆய்வகமாக இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.
News January 7, 2026
ராசி பலன்கள் (07.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


