News May 16, 2024
டிஷ்யூ பேப்பரால் விமானத்தில் பதற்றம்

டெல்லியில் இருந்து குஜராத்தின் வதோதராவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, அங்கிருந்த டிஷ்யூ பேப்பரில் ‘Bomb’ என எழுதி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதிகாரிகளிடம் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் வேறொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
Similar News
News December 4, 2025
ரயில்வேயில் 1,785 பணியிடங்கள்; APPLY NOW!

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த ஓராண்டு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு iroams.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வரும் டிச.17-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள். SHARE.
News December 4, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹96,160-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,020-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால், நம்மூரிலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக விலை குறைந்துள்ளது.
News December 4, 2025
திணறும் இண்டிகோ: பயணிகள் அவதி!

விமான பணியாளர்களின் புதிய பணி நேர வரம்பு, ஏர்பஸ் A320 பிரச்னை, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், நேற்று இண்டிகோவின் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவித்தனர். இதற்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ நிறுவனம், நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளித்துள்ளது. நாளை (டிச.5) வரை மேலும் விமானங்கள் ரத்தாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


