News August 6, 2024
அடுத்தடுத்த கொலைகளால் நெல்லையில் பதற்றம்

நெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். தீபக் ராஜா கொடூரக்கொலை, சாதி ரீதியிலான கொலைகள் என தொடர் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், நேற்றிரவு மேலப்பாளையம் சையது தமீம் என்ற இளைஞரை, மர்ம கும்பல் கொடூரமாகக்கொலை செய்துள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
Similar News
News January 16, 2026
கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News January 16, 2026
‘ஆட்டு பொங்கல்’ தெரியுமா?

தமிழக மக்களே! மாட்டு பொங்கல் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் ‘ஆட்டு பொங்கல்’ கேள்விப்பட்டு இருக்கீங்களா? நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் மாட்டுப் பொங்கலான இன்று ஆடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் ‘ஆட்டு பொங்கல்’ கொண்டாடப்படுகிறது. சில ஊர்களில், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மட்டுமின்றி, அவற்றைக் காவல் காக்கும் நாய்களுக்கும் மரியாதை செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. உங்க ஊரில் எப்படி?
News January 16, 2026
காசாவில் அமைதி வாரியம்: டிரம்ப்

போரின் கோரமுகத்தை காசாவும், காசா மக்களும் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர். இதனால், அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், காசாவில் அமைதியை கொண்டுவர வாரியம் அமைக்கப்படும் என்றும், அதன் தலைவராக டிரம்ப் செயல்படுவார் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் உடனே ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.


