News April 28, 2025
கேரளாவில் பதற்றம்… வெடிகுண்டு மிரட்டல்

கேரளாவில் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், போக்குவரத்துறை ஆணையர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். மே 2-ம் தேதி PM மோடி கேரளா செல்ல உள்ள நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
Similar News
News December 4, 2025
சனாதன தர்மத்தை பரப்ப வேண்டும்: பாலய்யா

பாலய்யா நடித்து வரும் 5-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ‘அகண்டா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று அவர் பேசும்போது, சனாதன தர்மம் பற்றி அடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தர்மத்திற்கு ஆதரவாக, அநீதிகளுக்கு எதிராக செயல்படுவதே சனாதன தர்மம் எனவும் அதை இளைஞர்களுக்கு இந்த படம் கற்று கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
News December 4, 2025
ராசி பலன்கள் (04.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 4, 2025
இந்துக்களின் பண்பாட்டு உரிமையை பறிப்பதா? நயினார்

திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்ததோடு, முருக பக்தர்கள் மீது வெறித்தனமாக திமுக அரசு தாக்கியுள்ளதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தி, பண்பாட்டு உரிமையை பறிக்கும் கொடூர ஆசையில் இப்படி செய்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், முருகப்பெருமானின் ஆசியோடு திமுக விரைவில் தமிழக மக்களால் துரத்தியடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


