News May 7, 2025
எல்லையில் பதற்றம்.. பாக்., NSA ஆக ISI தலைவர் நியமனம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு நீடித்து வரும் நிலையில், பாக்., பாதுகாப்பு ஆலோசகராக ISI லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் பாகிஸ்தான் இந்த மாற்றத்தை செய்துள்ளது. இரு நாடுகளிடையே தொடர்ந்து 7-வது நாளாக பதற்றம் நீடிக்கிறது. மத்திய அரசு பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் நேற்று <<16264690>>மாற்றம்<<>> செய்த நிலையில், பாக்., இதனை செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News August 24, 2025
சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு?

தமிழக டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால், ஆக.29 உடன் ஓய்வு பெறுவதற்கான கோப்பில் CM ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், புதிதாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக 2 ஆண்டுகளுக்கு அவரை நியமிக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த டிஜிபி பரிந்துரையில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் உள்ளனராம்.
News August 24, 2025
JUSTIN: ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ(ISRO) தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை, கடற்படையுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்து விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அதன் வேகத்தைக் குறைக்கும் வகையில் இந்த பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
1. 1939
2. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
3. Fathometer
4. பற்சிப்பி (enamel)
5. ஆர்யபட்டா
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?