News March 17, 2024

தென்காசி: தெருநாய்கள் தொல்லை!

image

தென்காசி, சுரண்டை பழைய மார்க்கெட் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதுடன் அப்பகுதிகளில் செல்லும் பொதுமக்களை விரட்டுவதும் , துரத்தி கடிப்பதுமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மக்களின் நலனை கருதி சுரண்டை நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News August 17, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்

News August 17, 2025

தென்காசியில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை; மிஸ் பண்ணாதீங்க!

image

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Consultant, Attender, Therapeutic Assistant பணிகளுக்கு 5 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். <>APPLY<<>> இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20-08-2025 வரை. 8ம் வகுப்பு, டிகிரி மற்றும் நர்சிங் படித்த தகுதியான நபர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். பிறருக்கு உதவும் வகையில் ஷேர் செய்யுங்கள்.

News August 17, 2025

குற்றாலம் செல்வோர் கவனத்திற்கு!

image

பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் வனத்துறை அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறி சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் இரும்பு கம்பியிலான டோல் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரும்பு கேட் அமைத்த வனத்துறையினர். மாலை 6 மணிக்கு மேல் பழைய குற்றால அருவிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!