News March 16, 2024
தென்காசி: திமுக சார்பில் விளையாட்டு போட்டி

பாவூர்சத்திரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் தலைமையில் கஷ்டம் ஹாட் இந்தியன் அகாடமி அமைப்பின் மூலம் இன்று வட்டார அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா, குங்பூ விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் சீனித்துரை ஒன்றிய சேர்மன் காவேரி சீனித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News November 4, 2025
தென்காசி: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்ட இன்று (04.11.25) ரோந்து பணி காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் 100 ஐ அழைக்கலாம். அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
BREAKING: ஆலங்குளம் MLA இராஜினாமா

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
News November 4, 2025
திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்எல்ஏ

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ- வாக இருந்து வருபவர் OPS தீவிர ஆதரவாளான மனோஜ்பாண்டியன் இன்று திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அவருடன் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.


