News March 17, 2024
தென்காசி மக்கள் குறைதீர் நாள் முகாம் ரத்து

தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப்பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
தென்காசி: பாதி விலையில் பைக், கார் வேணுமா??

தென்காசி அலகு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் சார்பு ஆய்வாளர் அலுவலகத்தில் 27.10.2025 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது. வாகனங்களை 26.10.2025 மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அன்று தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. SHARE!
News October 25, 2025
தென்காசி: அக்.27 உள்ளூர் விடுமுறை அளிக்க எதிர்பார்ப்பு

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான பண்பொழி திருமலை கோவில் ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மாதாபுரம் அருகே உள்ள தோரணமலை, பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி, சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹார நிகழ்வுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்ப்பு.
News October 25, 2025
தென்காசி: மழை மின் தடையா? தொடர்பு எண்கள் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது மழை காரணமாக மின்தடை ஏதும் ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து தடையற்ற மின்சாரம் வழங்க புதிய நடவடிக்கை எடுக்க மின் பொறியாளர்களுக்கு மெயின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் மின்தடை ஏற்பட்டால் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் 94987 94987 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE!


