News March 17, 2024
தென்காசி: 2,220 ஆண்டு பழமை வாய்ந்த பானை!

தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
Similar News
News November 20, 2025
பொது மக்களுக்கு மின்வாரியம் முக்கிய வேண்டுகோள்

மின்வாரியம் சார்பில் இன்று விடுத்துள்ள அறிவிப்பு; தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்கிறது மழை. நேரங்களில் மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்சாதனங்கள் சூழ்ச்சிகளை இயக்கும்போது எக்காரணம் கொண்டும் ஈரக் கைகளால் தொடக்கூடாது பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
News November 20, 2025
தென்காசி: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ. 21) நடைபெற உள்ளது. 8th, முதல் ஏதவது ஒரு டிகிரி, ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சம்பளம் ரூ.25,000 வரை வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் <
News November 20, 2025
செங்கோட்டை விரைவு ரயில்: வழித்தடங்களில் மாற்றம்

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 20, 21, 22, 23, 24, 25 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.


