News March 14, 2025
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்: புதின் ஏற்பு

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் உடன்பாடு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அதனை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, புதின் சம்மதிப்பார் என டிரம்ப் கூறியிருந்தார்.
Similar News
News March 14, 2025
மூத்த குடிமக்களுக்காக அன்புச்சோலை திட்டம்

மூத்த குடிமக்களுக்காக அன்புச்சோலை திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அன்புச்சோலை திட்டம் மூலம் 25 இடங்களில் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
News March 14, 2025
மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்க ₹420 கோடி ஒதுக்கீடு

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கப்படுவதால், உயர்க்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 19% உயர்ந்துள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறும் நோக்கில், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்திற்காக ₹420 கோடியும், மதுரை, கோவை, சென்னையில் மாணவியர் விடுதிகள் அமைக்க ₹225 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
News March 14, 2025
பள்ளிகள் மேம்பாட்டுக்கு ₹1,000 கோடி!

பள்ளிகள் மேம்பாட்டுக்கு ₹1,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் புதிய வகுப்பறை, அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்காக இந்த நிதி செலவிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மூன்றாம் பாலினத்தவருக்கும் புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இதற்காக புதுமைப்பெண் திட்டத்துக்கு ₹420 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.