News March 25, 2025
ராகு தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

திருமணஞ்சேரி திருத்தலம் திருமண தடைகளை நீக்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய அது நீங்கும். மேலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
Similar News
News March 26, 2025
மதுரை மண்ணில் ஹுசைனி உடல் அடக்கம்

புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஹுசைனியின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், காஜிமார் தெரு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
News March 26, 2025
கண்ணீர் மழையில் மனோஜ் உடல் தகனம்!

மாரடைப்பால் காலமான நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் (48) உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு தந்தை பாரதிராஜா, மகள்கள் ஆகியோர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்தனர். பாக்யராஜ், சீமான், வைரமுத்து உள்ளிட்டோர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். பல கதாபாத்திரங்கள் மூலமாக நம் மனதில் இடம்பிடித்த மனோஜ், இறுதியாக காற்றோடு காற்றாக கலந்துவிட்டார். REST IN PEACE MANOJ.
News March 26, 2025
அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிக் கனியை பறிக்குமா?

EPS – அமித் ஷா சந்திப்பு, அதிமுக – பாஜக கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது. ஒருவேளை, இக்கூட்டணி அமைந்தால், இவர்களுக்கு வாக்கு சதவீதம் உயர வாய்ப்புள்ளது. ஆனால், திமுக கூட்டணி பலமாக இருப்பதால், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்தக் கூட்டணி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?