News April 16, 2025
அடுத்த 3 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 – 37 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
நிரந்தர கொரோனா போல் தாக்கும் மத்திய அரசு: ஸ்டாலின்

சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், திமுகவிற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிரந்தர கொரோனா வைரஸ் போல, மத்திய அரசு தாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதை மீறியும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனக் கூறிய அவர், நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளை கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திமுக அரசின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
நீங்க எப்படி? மறந்துட்டு தேடுவீங்களா?

வண்டி சாவி, போன் என எதையாவது எங்கேயாவது வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் அதிக படைப்பாற்றல் மிக்கவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எப்போதும் மனதில் கற்பனை, கிரியேட்டிவிட்டி, ஐடியாக்கள் ஓடிக் கொண்டிருப்பதால் அவர்களால் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகிறதாம். சின்ன சின்ன விஷயங்களை மறப்பது குறைபாடல்ல, சக்திவாய்ந்த திறன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
திராவிட பொங்கல் Vs இந்துக்களின் விழா!

பொங்கல் பண்டிகையை ‘திராவிட பொங்கலாக’ கொண்டாட ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, பொங்கல் ‘இந்துக்களின் விழா’ என்றும், பொங்கலில் உள்ள இந்து அடையாளங்களை நீக்க திமுக சதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியது. அதிமுகவும், ‘அரசியல் நாடகம்’ என விமர்சித்த நிலையில், ஸ்டாலினின் அழைப்பு கட்சி தொண்டர்களுக்கானது; பொதுமக்களுக்கானது அல்ல என்று திமுக விளக்கமளித்துள்ளது.


