News February 16, 2025
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் உயரும்: IMD அலர்ட்

இன்னும் பிப்ரவரி மாதம் கூட முடியவில்லை. அதற்குள்ளாக சம்மர் வந்ததை போல தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக, சென்னை, வேலூர், மதுரை, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில், பிப்.17 முதல் பிப்.21 வரை தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என IMD தெரிவித்துள்ளது.
Similar News
News March 31, 2026
தாய்ப்பால் கூட நஞ்சாகி விட்டது: சீமான்

இக்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு கூட புற்றுநோய் இருப்பதாக சீமான் கவலை தெரிவித்துள்ளார். கஞ்சா, சுருட்டு பயன்பாடு, மது அருந்துதல் என எந்த பழக்கமுமே இல்லாத ஒரு குழந்தைக்கு புற்றுநோய் வருவதாகவும், இதற்கு தாய்ப்பால் நஞ்சாகிவிட்டதே காரணம் என்றும் கூறினார். தாய் சாப்பிடும் உணவு, அருந்தும் நீர் என அனைத்தும் விஷமாக உள்ளதாகவும், அதனாலேயே தாய்ப்பால் நஞ்சானது எனவும் சீமான் குறிப்பிட்டார். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
பல பிரச்னைகளுக்கு PM மோடியே காரணம்: ராகுல்

தன்னையும், தனது நிதி நிலையையும் பாதுகாப்பதிலேயே PM மோடி குறியாக உள்ளார் என ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய ரூபாய் வீழ்ச்சி, பங்குச்சந்தை & பொருளாதாரம் சரிவு, வேலையிழப்பு, சிலிண்டர் பிரச்னை ஆகியவற்றுக்கு PM மோடி சமரசம் செய்து கொண்டதே காரணம் என X-ல் ராகுல் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் எதிர்காலத்தை அவர் சரணடைய வைத்துவிட்டார் என்பதை 140 கோடி மக்களும் அறிவார்கள் என்று ராகுல் கூறியுள்ளார்.
News March 31, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 31, பங்குனி 17 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


