News March 3, 2025
5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: IMD

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. இன்று முதல் 7ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல,
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும் IMD கணித்துள்ளது.
Similar News
News December 5, 2025
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் டிசம்பர் 21-ம் தேதி அன்று மாபெரும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று 5 குழந்தைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி போலியோ சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 5, 2025
டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்பை கொண்ட நாடுகள்

World of Statistics-ன் புதிய தரவரிசை, 2025-ம் ஆண்டில் உலகின் டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்புகள் பெயரிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் உச்சரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாட்டு மக்கள் பேசுவது பிறரை ரசிக்க வைக்குமாம். அவை எந்தெந்த நாடுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 5, 2025
BREAKING: விஜய் எடுத்த புதிய முடிவு

புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், உப்பளம் மைதானத்தில் வரும் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த விஜய் தரப்பு அனுமதி கேட்டுள்ளது. உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மேடை எங்கே அமைக்கப்படுகிறது. நேர விபரம், எத்தனை பேர் பங்கேற்பார்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காவல்துறை கேட்டுள்ளது. இதனை தயார் செய்யும் பணிகளில் தவெகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


