News April 20, 2025
3 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: IMD

TN-ல் அடுத்த 3 நாள்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது. TN-ல் நாளை முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் 21ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
Similar News
News November 25, 2025
இந்த உயிரினத்துக்கு இதயமே இல்லை தெரியுமா?

மனிதர்கள் இதயம் இல்லாமல் ஒரு நொடியும் உயிர் வாழ முடியாது. ஆனால் ஜெல்லி மீன்கள் இதயம், மூளை, எலும்புகள் இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்கின்றன. உடல் முழுவதும் நரம்புகள் பரவி இருப்பதால் அதனால் இயங்க முடிகிறது. அத்துடன், தோல் வழியே ஆக்சிஜனை சுவாசிப்பதால் இவை உயிர்வாழ்கின்றன. 99% பேருக்கு இது தெரியாது, SHARE THIS.
News November 25, 2025
7 நாள்கள் விடுமுறை.. ரெடியா இருங்க!

அடுத்த வாரம் டிசம்பர் தொடங்கவுள்ள நிலையில், அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (டிச.7, 14, 21, 28) வங்கிகள் செயல்படாது. 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் (டிச.13, 27) விடுமுறை ஆகும். இதை தவிர கிறிஸ்துமஸ் அன்றும் (டிச.25) வங்கிகள் இயங்காது. இதற்கேற்ப, கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை பிளான் பண்ணிக்கோங்க மக்களே! SHARE IT.
News November 25, 2025
சுபமுகூர்த்தம்.. பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினமான நவ.27-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படவுள்ளது. மேலும் அதிகளவு ஆவணப் பதிவுகள் நடக்கும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


