News August 25, 2025
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: IMD

தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
அதிமுக கூட்டணியில் இல்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ADMK கூட்டணியில் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி அப்படி ஒரு கூட்டணி இருக்கிறதா என கிண்டல் செய்துள்ளார். விஜய்யின் மதுரை மாநாடு நல்ல எழுச்சி என புகழாரம் சூட்டினார். மேலும், அங்கிள் என கூறியது தவறு என்றால் டாடி, BRO என கூறுவது சரியா என கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் வரும் தேர்தலில் தவெகவுடன் இணையலாம் என பேசப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News August 25, 2025
நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: அமித்ஷா

சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல என அமித்ஷா தெரிவித்துள்ளார். சட்டசபை சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்தால் தேசத்தின் வளர்ச்சியில், அதன் பங்களிப்பு பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் நிதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் அவையை நடத்த அனுமதிக்காமல் இருப்பது நல்லதல்ல என தெரிவித்தார்.
News August 25, 2025
ஸ்டாலின் வருகையால் பிஹார் முன்னேறி விடுமா? PK

வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி பிஹாரில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரையில், வரும் 27-ம் தேதி CM ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பிஹாருக்கு தமிழக CM வருவதால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பிஹார் முன்னேறிவிடுமா என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் பிரச்னைகளுக்கு இங்குதான் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.