News May 1, 2024
தமிழகத்தில் வெப்பநிலை 5°C வரை உயரும்

தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு 2 முதல் 4°C வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-42°C-ஐ ஒட்டி இருக்கக்கூடும் என்றும், மே 4, 5ஆம் தேதிகளில் வெப்பநிலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39-40°C ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: முர்மு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்நாள் நிகழ்வில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசியுள்ளார் முர்மு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமானோர், இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றிருப்பதாக கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 10 வருடங்களில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
News January 28, 2026
SI தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற்ற SI பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 1,299 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வை 1,78,000 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பிப்.24 – மார்ச் 2-ம் தேதிவரை உடல் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள <
News January 28, 2026
அஜித் பவார் விபத்தில் மரணம்.. CM ஸ்டாலின் இரங்கல்

<<18980498>>விமான விபத்தில்<<>> மகாராஷ்டிர மாநில துணை முதல்வர்(DCM) அஜித் பவார்(66) உயிரிழந்தது வேதனையளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் பவாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.


