News May 25, 2024
இன்று முதல் படிப்படியாக வெப்பநிலை உயரும்

தமிழகத்தில் இன்று முதல் 29ஆம் தேதி வரை படிப்படியாக வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3°C வரை அதிகரித்து 39- 40 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
போர் பதற்றம்: இந்தியர்களுக்கு உதவ கண்ட்ரோல் ரூம்

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு டெல்லியில் பிரத்யேக கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த மையம் காலை 9 – இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இலவச எண்கள் மற்றும் இந்திய தூதரகங்களின் எண்கள் மேலே போட்டோவாக இணைக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
தங்கம் விலை மொத்தம் ₹4,600 குறைந்தது

அமெரிக்கா – ஈரான் இடையே போர் வெடித்துள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
இம்மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. மார்ச் 1-ம் தேதி சவரனுக்கு ₹1,26,200-ஆக இருந்த தங்கம் விலை சுமார் ₹4,600 குறைந்து ₹1,21,600-க்கு இன்று (மார்ச் 4) விற்பனை செய்யப்படுகிறது.
News March 4, 2026
பழி போட்டு முடக்க பார்க்கிறார்கள்: விஜய்

சமீபகாலமாக விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். இதற்கு தஞ்சை கூட்டத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய், தன்னை முடக்கிவிடலாம் என எண்ணி தொடர்ந்து தன்மீது சிலர் பழி போடுவதாக பேசியுள்ளார். மேலும், இந்த விஜய்யை முடக்கிவிடலாம் எனவும் ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை எப்படி முடக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


