News March 17, 2024
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மீது புகாரளிக்க தொலைபேசி எண்கள்

தேர்தல் நடத்தை விதிகள் மீறினால் சி – விஜில் மற்றும் சுவிதா ஆகிய மொபைல் ஆப்கள் மூலம் போட்டோ, வீடியோவுடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் 1800-425-5799, 0452 2535374, 0452 2535375, 0452 2535376, 0452 2535377, மற்றும் 0452 2535378 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவும் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
Similar News
News November 24, 2025
JUST IN மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார் என மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
மதுரை: குறுக்கே வந்த நாயால் பறிபோன உயிர்

சோழவந்தான் கண்ணன் மகன் வீரமணிகண்டன் 25. தனியார் பைனான்ஸ் ஊழியர். பள்ளபட்டி- திருமங்கலம் ரோட்டில் டூவீலரில் சோழவந்தானுக்குச் சென்றபோது அரசு விதைப்பண்ணை அருகே நாய் ஒன்று குறுக்கே வந்தது. உடனடியாக பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார். விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்து விட்டார்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து
அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


