News August 25, 2024

பிரான்ஸில் டெலிகிராம் நிறுவனர் துரோவ் கைது!

image

செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் நிறுவனத்தின் பாவெல் துரோவ் பிரான்ஸின் போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜர்பைஜான் நோக்கி பிரைவேட் ஜெட்டில் பயணித்த அவரை பாரிஸ் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுக்கு உதவியது, போதைப்பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது.

Similar News

News January 21, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 21, தை 7 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News January 21, 2026

திமுக அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: விவசாயிகள்

image

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியில் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலில் நடைபெற்ற
விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர், தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

News January 21, 2026

யானை கழிவில் இருந்து சுவையான காபி!

image

உலகின் மிக அரிய காபியான Black Ivory coffee மிகவும் சுவையாக இருப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த காபி தாயாரிக்கப்படும் தாய்லாந்தில், யானைகளுக்கு Arabica காபி செர்ரிகள் வழங்கப்பட்டு, பின்னர் அவற்றின் கழிவுகளில் இருந்து காபி விதைகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்து வறுத்து காபி தயாரிக்கப்படுகிறது. யானைகளின் குடலில் உள்ள பாக்டீரியா அதன் கசப்பு தன்மையை குறைக்க உதவுகின்றன.

error: Content is protected !!