News September 25, 2025
TN கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தெலங்கானா CM

சென்னையில் இன்று நடைபெறும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி பங்கேற்க உள்ளார்.2025-26-ம் ஆண்டுக்கான புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களை CM ஸ்டாலினுடன் இணைந்து, ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலைப்படுத்தி இவ்விழா 7 பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 25, 2025
அரியலூர் மாவட்டத்தில் 1,500 மரக்கன்றுகள் நடல்

அரியலூரை அடுத்த வாரணவாசி ஊராட்சியில் நேற்று (செப்.24) பசுமை தமிழ்நாடு இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதில், வனத்துறை சார்பில் 1,500 நாவல், பனை மற்றும் வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆட்சியர் பொ.ரத்தினசாமி மரக்கன்றுகளை நட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
News September 25, 2025
லடாக் சம்பவம் ஒரு எடுத்துகாட்டு: உமர் அப்துல்லா

மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டதை ஜம்மு & காஷ்மீர் மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதற்கு லடாக் சம்பவம் ஒரு எடுத்துகாட்டு என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாகவும், அமைதியாகவும் தாங்கள் மாநில அந்தஸ்து கேட்டபோது, அதை மறுத்து மத்திய அரசு துரோகம் செய்ததாக அவர் கூறியுள்ளார். யூனியன் பிரதேச அந்தஸ்தை கொண்டாடிய லடாக் மக்கள் தான், தற்போது மாநில அந்தஸ்து வேண்டி போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
திருமணம் வேண்டாம் குழந்தை வேண்டும்: சல்மான் கான்

59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். முந்தைய காதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததற்கு தன்னை தான் குறைசொல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு பார்ட்னர் மற்றொருவரை விட ஃபேமஸ் ஆகும் போது இருவருக்கும் இடையில் பிரச்னை தொடங்குவதாகவும், அதனால் இருவரும் ஒன்றாக வளர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.