News October 13, 2025
தேர்தல் நேரத்தில் தேஜஸ்விக்கு வந்த சிக்கல்!

IRCTC ஹோட்டல் தொடர்பான ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. மூவர் மீதும் மோசடி, கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஹார் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இது RJD கட்சிக்கும், தேஜஸ்விக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
Similar News
News October 13, 2025
ஆண்களை மட்டுமே விடுவித்த ஹமாஸ்

2 ஆண்டுகளாக பணயக் கைதிகளாக இருந்த 20 பேரை இன்று ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. நீண்ட காலத்துக்கு பின் குடும்பத்தினருடன் அவர்கள் இணைந்தது உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்தது. இந்நிலையில், பணயக் கைதிகளாக உயிருடன் இருந்தவர்கள் எல்லோரையும் ஒப்படைத்து விட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஆனால், இவர்களில் யாருமே பெண்கள் இல்லை. இதனால், பெண்களை கொன்றுவிட்டனரா (அ) ஒளித்து வைத்துள்ளனரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
News October 13, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா…?

திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், 3 நாள்கள்(அக்.18,19,20) தொடர் விடுமுறையாகும். ஆனால், ஊர்களுக்குச் செல்லும் பலரும் தீபாவளி அன்றே புறப்பட வேண்டிய சூழல் உள்ளது. இதனால், தீபாவளிக்கு அடுத்த நாள்(அக்.21) விடுமுறை அளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்கூட்டியே அறிவித்தால் டிக்கெட் புக் செய்ய வசதியாக இருக்கும் என கூறுகின்றனர். இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
News October 13, 2025
பழைய ₹2000 நோட்டுகள்: தீபாவளிக்கு அடித்த லக்!

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது தனது அம்மாவுக்கு, பழைய DTH பெட்டிக்குள் இருந்து ₹2000 நோட்டுகள் கிடைத்துள்ளதாக, போட்டோவுடன் ஒருவர் SM-ல் பதிவிட்டுள்ளார். அதுவும் ஒன்றிரண்டு அல்ல, ₹2 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள். சரியான காரணம் இருந்தால் RBI அலுவலகங்களில் ₹2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற அட்வைஸ் உடன், தீபாவளிக்கு லக் அடித்துள்ளதாக SM-ல் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.